உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிரேன் ஆப்பரேட்டர் உட்பட இருவர் மாயம்

கிரேன் ஆப்பரேட்டர் உட்பட இருவர் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் கடத்துார் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சந்துரு, 27. இவருக்கும் சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகள் சுதாவுக்கும் கடந்த, 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. சென்னையில் வசிக்கும் இவர்களுக்கு, மகன், மகள் உள்ளனர். சென்னையில் இருந்து கடந்த, 8ல் தீபாவளிக்கு கடத்துாருக்கு வந்த சந்துரு அன்று மதியம், 2:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. சென்னைக்கும் செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தாய் செல்லா புகார் படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.இதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாலுார் புரட்சி நகரை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் விக்னேஷ், 25, கிரேன் ஆப்பரேட்டர். கடந்த, 21ல் வீட்டில் இருந்து மாயமாகி விட்டதாகவும், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என, தாய் பராசக்தி ஏ.பள்ளிப்பட்டி போலீசில் கொடுத்த புகார் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி