தொப்பூரில் கவிழ்ந்த லாரிகள் டிரைவர்கள் இருவர் காயம்
தொப்பூர்,:சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்த டிரைவர் முருகன், 40. இவர், ஆந்திர மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு லாரியில் பருப்பு லோடு ஏற்றி வந்தார். அதேபோல், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த டிரைவர் தோட்டா சாலிஹோ, 31. இவர், உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து, மதுரைக்கு தார் லோடு ஏற்றி வந்தார். இரண்டு லாரிகளும் நேற்று மதியம், 12:40 மணிக்கு, தர்மபுரி மாவட்டம், பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் அருகே வந்தது. அப்போது தார் லோடு ஏற்றி வந்த லாரி, முன்னால் சென்ற பருப்பு லோடு லாரி மீது மோதியது. இதில், இரு லாரிகளும் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து இரு டிரைவர்களும் படுகாயம் அடைந்தனர். தொப்பூர் போலீசார் அவர்களை மீட்டு லாரிகளை அப்புறப்படுத்தினர்.