உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இன்னும் 50 ஆண்டுகளுக்கு தி.மு.க.,வை வழி நடத்துபவர் உதயநிதிதான்

இன்னும் 50 ஆண்டுகளுக்கு தி.மு.க.,வை வழி நடத்துபவர் உதயநிதிதான்

'அரூர், ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட, தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு, எஸ்.ஐ.ஆர்., பயிற்சி கூட்டம், அரூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். இதில், கட்சியின் வடக்கு மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான வேலு பேசியதாவது: இன்னும், 50 ஆண்டுகளுக்கு, தி.மு.க.,வை வழிநடத்துபவர் உதயநிதிதான். இந்தியாவில் மாநில கட்சிகளில், 6 முறை ஆளுங்கட்சியாக இருந்து, கட்டுக்கோப்பான ஒரே இயக்கம், 75 ஆண்டுகால, தி.மு.க., மட்டும்தான். தி.மு.க., நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும் கட்சி. பலர் புதிதாக, முதல் நாள் கட்சி ஆரம்பிக்கின்றனர், 2ம் நாள் ஒரு சேரை போட்டு, இது வருங்கால முதல்வர், வருங்கால முதல்வர் எனக்கூறுகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: எப்படி பணியாற்ற வேண்டும் என ஸ்கெட்ச் போடுவதில் அமைச்சர் வேலு வல்லவர். பொண்டாட்டி சொன்னா கேக்கணும் படம் எடுத்து, அதன்படி கேட்டுக்கிட்டு இருக்கார். சிலர், 'எனக்கு ஏன் ஓட்டு போடலே'ன்னு கேட்கிறாங்க. நீ வந்தா தானே ஓட்டு போடுவாங்க. ஜாதிய சொல்லி ஓட்டு வாங்கிட்டு போயிட்டா, எத்தனை நாள் நம்புவாங்க, அப்பன், மகன் சண்டை போட்டுக்கிட்டு, பங்கு பிரிக்கிறதுல தகராறு போயி, இப்ப வந்து இருக்காரு. அப்பாவை காப்பாற்ற முடியாதவர், மக்களை எப்படி காப்பாற்றுவார். பெற்றவர்களுக்கு சோறு போடாதவர், பெற்றவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அப்பாவின் உழைப்பில் வளர்ந்த இயக்கத்தை காட்டிக் கொடுக்கிறார். தர்மபுரி எம்.பி.,யாக இருந்து அன்புமணி என்ன செய்தார். ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் நிறைவேற்றுவதில் சட்டச்சிக்கல் உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.ஏமாற்றம்கூட்டத்தில் கலந்து கொண்ட ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு மட்டும், மட்டன் பிரியாணி பார்சல் வழங்கப்பட்டது. அதிலும் பலருக்கு கேட்டும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை