உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உதயநிதி பிறந்தநாளையொட்டி தங்க மோதிரம் அணிவிப்பு

உதயநிதி பிறந்தநாளையொட்டி தங்க மோதிரம் அணிவிப்பு

ஒகேனக்கல்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி நேற்று, தி.மு.க., மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் தர்ம-செல்வன், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்-பட்ட அரசு தலைமை மருத்துவமனையில், துணை முதல்வர் உத-யநிதி பிறந்த நாளில் பிறந்த குழந்தைக்கு 2 கிராம் தங்க மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து, கடமடை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு, 2 கிராம் தங்க மோதிரம் அணிவித்தார். அதன் பின், தாசம்பட்டி அருகே உள்ள குழிப்பட்டி கிராமத்தில் உள்ள பழங்குடி இன மக்களுக்கு நலத்-திட்ட உதவிகள் வழங்கி, பிரியாணிகளை வழங்கினார். நிகழ்ச்சி-களில் மாவட்ட துணை செயலாளர் உமாசங்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் வேலுமணி, சோலை மணி உள்ளிட்ட பொறுப்பா-ளர்கள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி