உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி

அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி

அரூர்: அரூரில் கடந்த, சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால், மக்கள் அவதியடைந்தனர்.தர்மபுரி மாவட்டம், அரூரில் கச்சேரிமேடு, திரு.வி.க., நகர், கோவிந்தசாமி நகர், நான்கு ரோடு, முருகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக காலை முதல், அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பேக்கரியில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், பொதுமக்களும் அவதியடைந்தனர். முறையாக மின்சாரம் வழங்க, மின்வாரியத்துறையினர் நட-வடிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை