உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 3வது ஊதியக்குழுவை அமல்படுத்த வலியுறுத்தல்

3வது ஊதியக்குழுவை அமல்படுத்த வலியுறுத்தல்

தர்மபுரி, அகில இந்திய பொறியாளர் மற்றும் தொலைதொடர்பு அலுவலர் சங்கத்தின், 2வது மாவட்ட மாநாடு, தர்மபுரியில் நடந்தது. மாவட்ட உதவித் தலைவர் ஜவஹர் தலைமை வகித்தார்.பி.எஸ்.என்.எல்., சேவை குறித்து, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட பொது மேலாளர் ரவிந்திரபிரசாத் பேசுகையில், ''தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 4ஜி சேவை அனைத்து கிராமங்களுக்கும் சென்றுள்ளது. சேவை குறித்த புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.மாநாட்டில், மாவட்ட தலைவராக ராஜேஷ்குமார், செயலாளராக ரமேஷ், பொருளாளராக பிரபாகரன் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். பி.எஸ்.என்.எல்., 4ஜி, 5ஜி மற்றும் பைபர் இணைப்பு உள்ளிட்ட தொலை தொடர்பை மேம்படுத்த வேண்டும். வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில்நுட்பமான, 4ஜி, 5ஜி பிரச்னைகளை தீர்த்து, சேவையை மேம்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு, 3வது ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதிய பலன்கள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை