உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரை சதம் அடித்த வாணியாறு அணை

அரை சதம் அடித்த வாணியாறு அணை

பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சேர்வராயன் மலை அடிவாரத்தில், வாணியாறு அணை உள்ளது. இதற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள, சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு மலையின் பின்புற வடக்கு பகுதி பிரதான நீராதாரமாக உள்ளது. சில நாட்களாக சேர்வராயன் மலைத்தொடரில் கனமழையால், வாணியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 245 கன அடியாக அதிகரித்து, அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அந்த அணையின் மொத்த உயரம், 65.27 அடி. அதில் தற்போது, 50 அடியை நீர்மட்டம் கடந்துள்ளது. இதனால் அணையின் நேரடி பாசன பரப்பு பகுதி விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை