உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல்லில் நீர்வரத்து 24,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 24,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்:கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டதால், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 24,000 கன அடியாக சரிந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே, அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளதால், அணைகளின் பாதுகாப்பு கருதி, அணைகளுக்கு வரும் நீர், அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. நீர்திறப்பையொட்டி, ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்தும், குறைவதுவுமாக உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 35,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 10:00 மணிக்கு, 43,000 கன அடியாக அதிகரித்த நிலையில், தொடர்ந்து நீர்வரத்து குறைந்து மாலை, 5:00 மணிக்கு, 24,000 கன அடியாக சரிந்தது. இதனால், அங்குள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உட்பட அருவிகளில், தண்ணீர் சீராக கொட்டியது. தொடர்ந்து, மூன்றாவது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை