உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 8,000 கன அடியாக அதிகரித்துள்-ளது.தமிழக - கர்நாடகா காவிரி நீர்படிப்பு பகுதிகளில், பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிக-ரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர் ஆணைய கணக்கீட்டின்படி நேற்று காலை, 10:00 மணிக்கு வினா-டிக்கு, 6,500 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, படிப்-படியாக அதிகரித்து மாலை, 6:00 மணிக்கு, 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்த-ருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகி-றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !