| ADDED : ஆக 02, 2024 11:52 PM
தர்மபுரி: தர்மபுரி அருகே, குமாரசாமிபேட்டையை சேர்ந்த தீபா, 30; இவர் மனிதவளத மேம்பாட்டுதுறையில் மேலாளராக உள்ளார். கடந்த அக்.,15ல் சென்னை செம்மன்சேரியை சேர்ந்த விக்-னேஷ்வர், 34; மேட்ரிமோனி மூலம், அறிமுகமாகி, திரு-மணம் செய்து கொள்வதாக தொடர்பு கொண்டு உள்ளார். தொடர்ந்து, விக்னேஸ்வர் தன் தந்தை மற்றும் தாயாருக்கு உடல்-நிலை சரியில்லை என, அவ்வப்போது, பணம் கேட்டுள்ளார். இதில், தீபா, 50 லட்சம் வரை நகை அடகு வைத்து மற்றும் வங்-கிகளில் கடன் பெற்று கொடுத்துள்ளார். ஆசை வார்த்தை கூறி-யதை நம்பி, தீபா சென்னை சென்று பார்த்தபோது, அனைத்தும் பொய் என தெரிய வந்தது. இது குறித்து, தீபா கேட்டபோது, விக்-னேஸ்வர் சில புகைப்படங்களை வெளியிட்டு மனரீதியாக தொந்-தரவு செய்துள்ளார். விக்னேஸ்வர் வாங்கிய, 50 லட்சத்தில், 25 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்டபோது, அவரின் குடும்பத்தார் தகாத வார்த்-தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து, தீபா அளித்த புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.