மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
18 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
18 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
18 hour(s) ago
தர்மபுரி: ஒசஹள்ளி பஞ்சாயத்தில், புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த, ஒசஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட வேடியூர், பெருமாள்கோவில்பட்டி பகுதிகளுக்கு இடையே, புதிதாக டாஸ்மாக் கடை திறக்க உள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அதில், எங்கள் பகுதியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சென்று வரும், மிக முக்கிய சாலையாக உள்ள இடத்தில், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால், விபத்துகள், வன்முறை சம்பவங்கள் உள்ளிட்டவை அதிகளவில் நடக்கும் சூழல் உள்ளது. விளை நிலங்கள் பாதிப்படையும். டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.கலெக்டர் சாந்தியை சந்திக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த டி.ஆர்.ஓ., பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, கடையை வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன் பின், பெண்கள் கலைந்து சென்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago