உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மெடிக்கல் ரெப்பிடம் செயின் திருடிய தொழிலாளிக்கு காப்பு

மெடிக்கல் ரெப்பிடம் செயின் திருடிய தொழிலாளிக்கு காப்பு

தர்மபுரி, தர்மபுரி பிடமனேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு, 37, மெடிக்கல் ரெப்பாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த செப்., 22ல் மாலை, 4:00 மணிக்கு தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் உள்ள பொது கட்டண கழிப்பறைக்கு சென்றார். அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போதையில் பிரபுவின் தோள் மீது சாய்ந்து விழுவது போல், அவரது சட்டையை இழுத்துள்ளார். அப்போது, பார்த்து நில்லுங்கள் என பிரபு கூறியதற்கு, அந்த நபர், 'என்னை மன்னித்து விடுங்கள்' என சொல்லி விட்டு சென்று விட்டார். பின், கழிப்பறைக்கு சென்ற பிரபு தன் கழுத்தை பார்த்தபோது, அணிந்திருந்த ஒரு பவுன் செயினை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகார் படி, தர்மபுரி போலீசார் வழக்குப்பதிந்து செயினை திருடியதாக பென்னாகரம் அடுத்த அரக்காசன அள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி முனிவேல், 38, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை