உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளியில் உலக ஓசோன் தினம்

பள்ளியில் உலக ஓசோன் தினம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த நாட்டாண்மைகொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை வகித்தார். எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய உழவியல் நிபுணர் உதயன், ஊட்டச்சத்து நிபுணர் பூமதி ஆகியோர், பள்ளி தோட்டத்திற்கு தேவையான விதைகள், செடிகள் மற்றும் உரங்களை வழங்கி பேசினர். மேலும், பள்ளி மாணவ, மாணவியருக்கு நடந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும், மாணவர்களால் சேகரித்த, 500 பனை விதைகள் காட்சி படுத்தப்பட்டது. பிளாஸ்டிக்கை தவிர்த்து, மீண்டும் 'மஞ்சப்பை'யை பயன்படுத்துமாறு வலியுறுத்தி அனைவருக்கும், 'மஞ்சப்பை' வழங்கப்பட்டன. மாணவர்கள் ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பது குறித்த வாசகங்களை கூறியவாறு ஊர்வலமாக சென்று, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை