மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
12-Jan-2025
தர்மபுரி: தர்மபுரி பகுதியிலுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும், ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. இதையொட்டி, தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், ஆனந்த நடராஜர் சன்னதியில், நடராஜருக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.பின், ஆருத்ரா தரிசன காட்சியும், சுவாமிக்கு மஹா தீபாராதனை மற்றும் உபகார பூஜைகளும் நடந்தன. இதில் ஏராளமான பக்-தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் மற்றும் சிவசுப்பிரம-ணிய சுவாமி திருவீதி உலா நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு திருவாதிரை களி சிறப்பு பிரசாத-மாக வழங்கப்பட்டது. இதேபோல், தர்மபுரி நகர் கோட்டை மல்-லிகார்ஜூனேஸ்வர் கோவில், நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்-வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், ஆத்து-மேடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில், எஸ்.வி., ரோடு, சித்தி லிங்-கேஸ்வரர் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கோவில்-களில், ஆருத்ரா தரிசன வழிபாடு நடந்தது.
12-Jan-2025