மேலும் செய்திகள்
தண்ணீர் பந்தல் திறப்பு
24-Mar-2025
அரூர்: அரூர் எஸ்.ஐ., சக்திவேல் தலைமையிலான போலீசார், அரூர் - தர்மபுரி சாலையில், நேதாஜி நகரில், நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் மூட்டை-யுடன் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், 17 கிலோ குட்கா இருந்தது. அவரிடம் விசாரித்ததில், அவர், ராஜஸ்தானை சேர்ந்த ராஜேஷ்நாசிக், 19, என்பதும், அரூரி-லுள்ள மளிகை கடையில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்-தது. அவரை கைது செய்த போலீசார், குட்கா மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.அ.தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்புகடத்துார்: கடத்துார் பஸ் ஸ்டாண்டில், நகர, அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நடந்தது. மாவட்ட செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். பின் பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்ப்பூசணி, உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. இதில், எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன், நகர செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
24-Mar-2025