உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மான் இறைச்சி விற்க முயன்ற வாலிபர் கைது

மான் இறைச்சி விற்க முயன்ற வாலிபர் கைது

அரூர், மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத் மற்றும் மொரப்பூர் பிரிவு வனவர்கள் விவேகானந்தன், டார்வின், வனக்காப்பாளர்கள் பெரியசாமி, உதயகுமார் ஆகியோர், நேற்று முன்தினம் மதியம், 3:45 மணிக்கு தாமலேரிப்பட்டி தென்பெண்ணையாறு வழி சராகத்தில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக வந்த, 3 பேரை பிடிக்க முயன்றனர். ஒருவர் பிடிபட்ட நிலையில், இருவர் தப்பினர். பிடிபட்டவரிடம் விசாரித்ததில், அவர் ஊத்தங்கரை அடுத்த வெள்ளிமலையை சேர்ந்த ராம்குமார், 22, என்பதும் கம்பி வலை மூலம் மான் வேட்டையாடி, அதன் இறைச்சியை பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்ய எடுத்து வந்தது தெரிந்தது. அவரிடமிருந்து, 20 மான் இறைச்சி பொட்டலங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவரை கைது செய்தனர். தப்பியோடிய வெள்ளிமலை ராஜ்குமார், 30, அரூர் பச்சினாம்பட்டி சரவணன், 20, ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை