உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிளக்ஸ், போஸ்டருக்கு தடை துண்டு பிரசுரம் தான் ஒரே வழி

பிளக்ஸ், போஸ்டருக்கு தடை துண்டு பிரசுரம் தான் ஒரே வழி

திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தலில் சுவர் விளம்பரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிளக்ஸ், போஸ்டர்களும் ஒட்டக்கூடாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் நகர்ப்புறங்களில் மட்டும் சுவர் விளம்பரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் இந்த உத்தரவு கடுமையாக்கப்பட்டு, கிராமங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளக்ஸ், போஸ்டர் ஒட்டவும் தடை உள்ளது. விதிமுறை தெரியாமல், முந்திக்கொண்டு சுவர் விளம்பரம் செய்தவர்கள், செய்வதறியாது உள்ளனர். இவற்றை அழித்து, வழக்கு பதியும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், வாக்காளர்களை நேரில் சந்திப்பதை தவிர, வேறு வழியில்லை. வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மட்டுமே நம்பி, வேட்பாளர்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ