உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோடை வெப்பம் ஒருபுறம் தொடர் மின்தடை மறுபுறம் தவியாய் தவிக்கும் பொதுமக்கள்

கோடை வெப்பம் ஒருபுறம் தொடர் மின்தடை மறுபுறம் தவியாய் தவிக்கும் பொதுமக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெப்பம் ஒருபுறம், மின்தடை மறுபுறம் என பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.மாவட்டத்தில் சில தினங்களாக கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் அறிவிக்கப்படாத மின் தடையும் உடன் தொடர்வதால் கோடை விடுமுறையில் வீட்டில் உள்ள குழந்தைகள் உட்பட பெரியவர்கள் மிகுந்த அல்லல் பட்டு வருகின்றனர். மாசிலாமணிபுரத்தில் அறிவிக்கப்படாத மின்தடை தொடர்ந்து நிகழ்வதால் பொதுமக்கள் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.மின்தடை சில நிமிடங்கள் வரை மட்டுமே தொடர்ந்தாலும் கோடை வெப்பத்தால் நிலவும் புழுக்கமானது நள்ளிரவு துாக்கத்தை முழுமையாக கலைந்து விடுகிறது. இதனால் வயதானவர்களுக்கு இரவு முழுவதுமான ஓய்வு தடைபட்டு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. பகலில் நிலவும் மின்தடையில் கொளுத்தும் கோடை வெப்பத்தால் பொறுக்க முடியவில்லை. கோடை காலம் முடியும் வரையாவது அறிவிக்கப்படாத மின் தடையை தவிர்க்க மின் நிர்வாகம் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை