உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ், லாரி விபத்தில் 9 பேர் காயம்

பஸ், லாரி விபத்தில் 9 பேர் காயம்

வேடசந்துார், : வேடசந்துாரில் இருந்து கரூர் மாவட்டம் பள்ளபட்டி நோக்கி தனியார் பஸ் சென்றது. அரவக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் மோகன் 29 ,ஓட்டினார். 50 பயணிகள் இருந்தனர்.வேடசந்துார் கருக்காம்பட்டி தனியார் நுாற்பாலை முன்பு காலை 8:30 மணிக்கு பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டனர். புறப்பட தயார் ஆனபோது அதே ரோட்டில் வந்த லாரி பஸ் பின்புறம் மோதியது. லாரியை தர்மபுரி மாவட்டம் மல்லாபுரத்தை சேர்ந்த சக்திவேல் 44, ஓட்டினார். பஸ் பயணிகளான தாசிரிபட்டி கண்ணன் 40, கேரளாவை சேர்ந்த அணில் 34 , பீகாரை சேர்ந்த செர்ப்ராஜ் 22, உட்பட 9 பேர் காயமடைந்தனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை