உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மஞ்சநாயக்கன்பட்டி பால்குட அபிஷேகம்

மஞ்சநாயக்கன்பட்டி பால்குட அபிஷேகம்

பழநி : மஞ்சநாயக்கன்பட்டி உச்சிமாகாளியம்மன் கோயில் விழாவில், பக்தர்கள் பால்குட அபிஷேகம் செய்தனர்.இங்கு ஆடிமாத கடைசி வெள்ளியன்று, பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்துவர். பால் அபிஷேக விழா நேற்று நடந்தது. கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமி தலைமை வகித்தார். வேணுகோபாலசுவாமி கோயிலில் இருந்து, பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். மூலஸ்தான கோயிலில், அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தன.

தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு

பழநி : பெரியகலையம்புத்தூர் மகாலட்சுமி அம்மன் கோயிலில், ஏராளமான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி செலுத்தினர். இங்கு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி செலுத்துவர். இவ்விழா ஆக.. 11 ல் துவங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன், ரத ஊர்வலம் நடந்தது. நேற்று காலை நேர்த்தி செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தலைமை பூசாரி அருள் தலைமையில், சேர்வை ஆட்டத்துடன் அம்மன் ஊர்வலம் நடந்தது. பக்தர்களின் தலையில், தேங்காய் உடைத்தனர். சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

விரிவாகிறது வன எல்லை

பழநி : ஆண்டிபட்டி வனப்பகுதியுடன் 1,200 ஏக்கரை இணைப்பதற்கான ஆய்வு ஆக., 19 ல் நடக்கிறது.பழநி வனச்சரகத்தில் உள்ள ஆண்டிபட்டி பகுதியுடன், இப்பகுதியில் உள்ள வருவாய் துறை நிலங்கள் இணைக்கப்பட உள்ளன. இதற்காக ஐந்து இடங்களில் 1,200 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள் ளன. இவற்றை இறுதி செய்வதற்காக, கூட்டு நடவடிக்கைக்குழு ஆய்வு செய்ய உள்ளது. வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''எல்லையை விரிவுபடுத்தும் வகையில், சில பகுதிகள் வனத்துறையுடன் இணை க்கப்பட உள்ளன. ஆண்டிபட்டி பகுதியில் சின்னக்கரடு, சக்கிலிக்கான் கரடு உள்பட ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பிலான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை, பழநி ஆர்.டி.ஓ., மாவட்ட வனஅலுவலர் தலைமையிலான கூட்டு நடவடிக்கைக் குழு ஆய்வு செய்ய உள்ளது. விவசாய நிலத்தின் தன்மை, வருங்காலத்தில் பொதுவான தேவைக்கு பயன்பட வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.

கார்- பஸ் மோதல் : குழந்தை பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கார் மீது அரசு பஸ் மோதி மகாராஷ்டிராவை சேர்ந்த குழந்தை இறந்தது. மகாராஷ்டிரா கருநகி பகுதியை சேர்ந்தவர் விட்டல் கிஷன்பாபர். மனைவி ராணி, குழந்தை ஆதித்யா (7), டிரைவர் ராஜாராம் மோரே ஆகியோர் மதுரைக்கு சுற்றுப்பயணம் சென்று, கோயம்புத்தூருக்கு புறப்பட்டனர். மாருதி ஸ்விட் காரில் நேற்று மாலை 4 மணிக்கு, திண்டுக்கல் தோமையார்புரம் அருகே, அரசு பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் குழந்தை இறந்தது. மற்றவர்கள் காயமடைந்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ