உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இதுக்காக இப்படியா செய்வீங்க?

இதுக்காக இப்படியா செய்வீங்க?

பழநி, வத்தலக்குண்டு பகுதியில் உள்ளாட்சி 'சீட்' கிடைக்காமல் போன அ.தி.மு.க., நிர்வாகிகள், 'அமைச்சர் விஸ்வநாதன், மாவட்டத்திற்கு எப்போது வருவார்?' என, வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சரிடம், கட்சியினர் முறையிட்டனர். பழநியை சேர்ந்த ஒருவர், ''மாஜி எம்.பி., குமாரசாமியும், நகர் செயலாளர் பரதனும் எங்களை வளர விடவில்லை,'' என, திடீரென அவரது காலை பிடித்து கதறினார்.

அவரை சமாதானப்படுத்தி அமைச்சரை மீட்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இந்த களேபரத்தில், அமைச்சரின் வேட்டியில் கீழ் பகுதி கிழிந்தது. இதே 'டென்ஷனுடன்' பிரசாரத்திற்கு புறப்பட்ட அமைச்சருக்கு இடியும், மழையும் தான் காத்திருந்தது. பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சென்னை புறப்பட்டு போனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ