உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரவுடிகளை கண்காணிக்க 20 போலீஸ்; எஸ்.பி., பிரதீப் தகவல்

ரவுடிகளை கண்காணிக்க 20 போலீஸ்; எஸ்.பி., பிரதீப் தகவல்

திண்டுக்கல்: ''திண்டுக்கல்லில் ரவுடிகளை கண்காணிக்க துப்பாக்கியுடன் கூடிய 20 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக,'' திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப் பேசினார்.திண்டுக்கல் எஸ்.பி.,அலுவலகத்தில் நடந்த துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: திண்டுக்கல் நகரில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சுழற்சி முறையில் 20 போலீசார் துப்பாக்கியுடன் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரவுடி பட்டியல்களில் உள்ளவர்களை கண்காணித்து அவர்கள் வீடு பகுதிகளை ரகசியமாக கண்காணிக்கப்படும். திண்டுக்கல் நகரில் முதல்கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் பின் மாவட்டம் முழுவதும் இதேநிலை கடை பிடிக்கப்படும். துப்பாக்கி ஏந்திய குழுவில் 2 வகையான போலீசார் உள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அப்பகுதிகளில் எந்நேரமும் போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இனி பொது மக்கள் அச்சமில்லாமல் இருக்கலாம் என்றார். இதை தொடர்ந்து டூவீலர்களில் துப்பாக்கியுடன் கூடிய போலீசார் ரோந்து பணியை எஸ்.பி.,பிரதீப் தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை