| ADDED : ஏப் 28, 2024 05:28 AM
திண்டுக்கல், தங்களுடைய நிலத்தை தனி நபர் அளப்பதாக கூறி வடமதுரையைச் சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.வடமதுரை வி.சித்துார் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி 52. இவரது மனைவி குஷ்பூ 38. இவர்களுக்கு 13, 11, 9 , 8 வயதுகளில் 4 மகள்கள் உள்ளனர். குடும்பத்தோடு நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த ஈஸ்வர மூர்த்தி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். விசாரணையில், ஈஸ்வர மூர்த்தி குடும்பதாருக்கு வி.சித்துார் பகுதியில் நிலம் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய நிலத்தை அளப்பதற்காக நீதிமன்ற உத்தரவு பெற்று அதற்கான பணியினை மேற்கொண்டுள்ளார். நிலத்தை சரியாக அளக்க அருகில் இருக்கும் ஈஸ்வர மூர்த்தி நிலத்தினையும் அளந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயற்சித்தது தெரிய வந்தது. மேலும் நிலத்தை அளந்தால் இவருக்கு பாதை வராது என்பதும் தெரிய வந்தது.நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர்களை வடமதுரை போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.