உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம்

கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம்

முகம் சுளிக்கும் சுற்றுலா பயணிகள் அவதிகொடைக்கானல்,ஜூலை 7 -- கொடைக்கானல் நகரில் செயல்படும் கட்டண கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் , சுற்றுலா பயணிகள் பாதிக்கின்றனர்.சுற்றுலா நகரான கொடைக்கானலில் நான்கு சமுதாய கழிப்பறைகளும் பல்வேறு இடங்களில் சாதாரண கழிப்பறைகளும் பயன்பாட்டில் உள்ளது. இவற்றை நகராட்சி ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு குத்தகைக்கு விடுத்துள்ளனர். நகராட்சி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடுத்து அனைத்து உபயோகத்திற்கும் ரூ. 10 வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இதற்கான முறையான ரசீதும் வழங்கப்படுவதில்லை. பயணிகள் கூடுதல் கட்டணம் குறித்து கேட்கப்படும் நிலையில் முறையாக பதில் அளிப்பதில்லை.கட்டண கழிப்பறை அறிவிப்பு பதாகைகளில் சிறுநீர், மலம் கழிப்பதற்கு உரிய கட்டணங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படாத நிலை உள்ளது. இதில் பஸ் ஸ்டாண்டில் செயல்படும் கழிப்பறையில் அடாவடியாக வசூலிக்கும் நடைமுறை தொடர்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் திறந்தவெளியை நாடும் நிலை தொடர்கிறது . சத்தியநாதன், கமிஷனர், கொடைக்கானல்: கட்டணக் கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்க ரூ. இரண்டு , மலம் கழிக்க ரூ.ஐந்து வசூலிக்கவே ஒப்பந்த புள்ளியில் கோரப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தெரிய வந்திருப்பதால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி