உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்தி சில வரிகளில்..

செய்தி சில வரிகளில்..

மா.கம்யூ., செயலாளர் தேர்வுகுஜிலியம்பாறை:மா. கம்யூ., திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருந்த சச்சிதானந்தம் எம்.பி., ஆன நிலையில் மாவட்ட செயலாளர் தேர்வுக்கு மாவட்ட குழு கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை விதித்தார். மத்திய குழு உறுப்பினர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாலபாரதி, பாண்டி, மதுக்கூர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். புதிய செயலாளராக குஜிலியம்பாறை பி.செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார்.பா.ஜ., கொண்டாட்டம்ஒட்டன்சத்திரம் : பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றதை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்ட் முன்பு பா.ஜ., சார்பில் வெடிகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. மாநில செயற்கு உறுப்பினர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் அண்ணாமலை, அரசு தொடர்பு மாவட்டத் தலைவர் மகுடீஸ்வரன், நகரத்தலைவர் சிவா, ஒன்றிய தலைவர்கள் ரகுபதி, ருத்ரமூர்த்தி, நகர துணை தலைவர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.பெரியகோட்டையில் மேற்கு ஒன்றிய தலைவர் ரகுபதி தலைமையில் கொண்டாடப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா தொண்டர்கள் , பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.ஆர்ப்பாட்டம்திண்டுக்கல் : 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாக மாற்ற வேண்டும். ரூ.600 ஆக ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , பெண்கள் சார்பில் திண்டுக்கல் அடியனுாத்து ஊராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் வசந்தாமணி,ஒன்றிய செயலாளர் அம்மையப்பன் பங்கேற்றனர். முடிவில் ஊராட்சி தலைவர் ஜீவானந்தத்திடம் மனு கொடுக்கப்பட்டது.டூவீலர் மீது மோதிய கார்தாடிக்கொம்பு : திண்டுக்கல் பழைய கரூர் ரோடு என்.எஸ்., நகரை சேர்ந்தவர் சண்முகம் 56. டூவீலரில் சென்ற போது என்.எஸ்., நகரைச் சேர்ந்த ராஜா ஓட்டி வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் சண்முகம் காயமடைந்தார். தாடிக்கொம்பு எஸ்.ஐ., பாக்கியசாமி விசாரிக்கிறார்.மாநில செயலாளர் நியமனம்திண்டுக்கல்:தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க 2024 -26ம் ஆண்டுகளுக்கான மாநில நிர்வாகிகள் தேர்தல் கோவையில் நடந்தது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில பொது செயலாளராக திண்டுக்கல் தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.இவருக்கு சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.நுாதன போராட்டம்திண்டுக்கல் :நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடியை கண்டித்து திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்களில் கருப்புத்துணி கட்டி நுாதன போராட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் நிருபன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முகேஷ்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் பிரேம்குமார்,முன்னாள் நகர தலைவர் விஷ்ணுவர்த்தன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை