| ADDED : மார் 22, 2024 05:17 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2121 ஓட்டுச்சாவடிமையங்களில் பணியாற்ற 10,181 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 8484, இருப்பு அலுவலர்கள் 1697 பேர் என 10,181 அலுவலர்கள் தேவைப்படுகின்றனர். இதன்படி ஓட்டுச்சாவடிமையங்களில் பணிபுரியும் அலுவலர்களை சட்டசபை தொகுதி வாரியாக தேர்வு செய்யும் பணி கலெக்டர் பூங்கோடி தலைமையில் நடந்தது.இதில் டி.ஆர்.ஓ., சேக் முகையதீன், நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார் உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.இப்பணியிடங்களுக்கு 10,500 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்,பழநி சட்டசபை தொகுதியில் உள்ள 323 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய 1550, ஒட்டன்சத்திரத்தில் உள்ள 282 ஓட்டுச்சாவடிகளில் 1354 , ஆத்துாரில் 1536 , நிலக்கோட்டையில் 1296, நத்தத்தில் 1570 , திண்டுக்கல்லில் 1392, வேடசந்துாரில் 1483 என 7 தொகுதிகளில் உள்ள 2121 ஓட்டுச்சாவடிகளில் 8484 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 1697 இருப்பு அலுவலர்கள் என 10,181 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதோடு ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான அலுவலர்களைவிட 20 சதவீதம் கூடுதலாக அலுவலர்களும் தேர்வு செய்யப்பட்டு இருப்பு அலுவலர்களாக வைக்கப்பட்டுள்ளனர்.