உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா கடத்தல் 2 பேர் கைது இருவருக்கு வலை

கஞ்சா கடத்தல் 2 பேர் கைது இருவருக்கு வலை

திண்டுக்கல்:திண்டுக்கல் வழியாக, வெளி மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக எஸ்.பி., பிரதீப்பிற்கு தகவல் கிடைத்தது. அதன்படி வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, எஸ்.ஐ., ராஜகோபால் தலைமையிலான தனிப்படை போலீசார் திண்டுக்கல் பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அன்று மாலை 5:00 மணிக்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் வெளி மாவட்ட பதிவெண் கொண்ட இரு டூ - வீலரில் வந்த நால்வர் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர். இருவர் சிக்கிய நிலையில் இருவர் தப்பினர்.சிக்கியவர்களிடம் நடத்திய விசாரணையில், துாத்துக்குடி வேல்முருகன், மதுரை பாலா எனவும், அவர்கள் கோவைக்கு கஞ்சா கடத்தி செல்ல வந்த ஏஜன்ட்கள் என்பதும் தெரிந்தது. இவர்களை கைது செய்த போலீசார் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அவர்கள் மீது வெளி மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. தப்பிய இருவரை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி