காஸ் சிலிண்டர் வெடித்து தீ தம்பதி உட்பட 4 பேர் காயம்
கோபால்பட்டி : நத்தம் கோபால்பட்டி அருகே காஸ் சிலிண்டரில் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி உட்பட 4 பேர் காயமடைந்தனர். கோபால்பட்டி எம். ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பரமசிவம் 54. இவரது மனைவி அன்னக்கிளி 48. இவர்களது வீட்டில் சில நாட்களாக சமையல் காஸ் எரியாமல் இருந்தது. ஏர்ப்போர்ட் நகர் ஒத்தக்கடையில் இருக்கும் தனியார் காஸ் சிலிண்டர் நிறுவனத்தில் பரமசிவம் புகார் அளித்தார்.அதன்படி ஊழியர்களான வேம்பார்பட்டியை சேர்ந்த மணி 32, ராஜா 33, ஆகியோர் காஸ் சிலிண்டரை சரி பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது காஸ் கசிவு ஏற்பட்டு தீ பற்றியது. இதில் பரமசிவம், அன்னக்கிளி,ஊழியர்கள் 2 பேர் என 4 பேரும் காய மடைந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.