உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலி பாஸ்போர்ட் தயாரித்த அகதிகள் உட்பட 4 பேர் கைது

போலி பாஸ்போர்ட் தயாரித்த அகதிகள் உட்பட 4 பேர் கைது

வத்தலக்குண்டு : போலி ஆவணங்கள் பயன்படுத்தி, பாஸ்போர்ட் பெற்ற திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் யோகதீபன், 24, ஸ்டீபன் ஸ்டான்லி, 29, பாலதாஸ், 42. மூவரும் சென்னையைச் சேர்ந்த பிரிட்டோ, 34, என்பவர் வாயிலாக இலங்கை குடியுரிமையை மறைத்து, இந்திய குடியுரிமை போன்று போலி ஆவணங்களை தயாரித்து பாஸ்போர்ட் பெற்றனர். அகதிகள் முகாம் ஆர்.ஐ., மனோகரன் புகாரின்படி, இவர்கள் மூவர் மற்றும் பிரிட்டோ என, நான்கு பேரையும் வத்தலக்குண்டு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை