உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழிலாளி கொலையில் 6 பேர் கைது

தொழிலாளி கொலையில் 6 பேர் கைது

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே கூலித்தொழிலாளி கொலை வழக்கில் போலீசார் 6 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.மே4ல் நடுப்பட்டி வேல்முருகன் வீட்டின் முன்பு ஜல்லி கொட்டியதில் தகராறு ஏற்பட்டு, கரியாம்பட்டியை சேர்ந்தவர்களால் நடுப்பட்டி அழகு பாண்டிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. போலீஸ் விசாரணையில் இளம்பெண்ணை கேலி செய்த விவகாரம் இதற்குள் அடங்கி இருப்பது தெரிந்தது. இந்நிகழ்வுகள் தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்த நிலையில் நடுப்பட்டி கூலித் தொழிலாளி ஆண்டார், மே 6ல் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டங்களில் நடுப்பட்டி கிராமத்தினர் ஈடுபட்டனர். தனிப்படை போலீசார் ஏற்கனவே நடந்த சம்பவங்களுக்கும்,கொலைக்கும் தொடர்பு இருந்ததால் கரியாம்பட்டியை சேர்ந்த சக்திவேல், மருதை, லோகநாதன்,ரமேஷ் குமார், விக்னேஷ்வர், கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி