மேலும் செய்திகள்
பைக்கில் கஞ்சா கடத்தல் நான்கு பேர் கைது
28-Feb-2025
பழநி: பழநியில் கஞ்சா புழக்கம் அதிகமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தினர். இந்நிலையில் பழநி டவுன் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ள வையாபுரி குளம் ஐந்து கண் பாலம் அருகே நின்றிருந்த சத்யா நகரை சேர்ந்த ராஜாமணி 27, மதுரை மேல பொன்னகரம் அரவிந்தன் 39, பழநியை சேர்ந்த பால்பாண்டி 19, ஆகியோரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். ஆயக்குடி போலீசார் கோவிந்தாபுரம் பகுதியில் திருநகரைச் சேர்ந்த பிரசன்னா குமார் 25, அடிவாரத்தைத் தேர்ந்த தியாகராஜன் 20, புது ஆயக்குடியைச் சேர்ந்த விஸ்வா 21, ஆகியோரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். பழநி தாலுகா போலீசார் பெத்தநாயக்கன்பட்டியில் கஞ்சா வைத்திருந்த சரவணனிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். குரும்பபட்டி பூங்காவில் இருந்த காமராஜ் நகர் பெரியசாமி 19, பழநியைச் சேர்ந்த பெரியாண்டவர் 32, ஆகியோரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை அடிவாரம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து ஒரே நாளில் 9 பேரை கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர்.
28-Feb-2025