உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரி மாணவியிடம் 5 பவுன் செயின் பறிப்பு

கல்லுாரி மாணவியிடம் 5 பவுன் செயின் பறிப்பு

வேடசந்துார் : பூத்தாம்பட்டி அருகே பஸ்சுக்காக காத்திருந்த கல்லுாரி மாணவியிடம் டூவீலரில் வந்த நபர்கள் இருவர் 5 பவுன் செயினை பறித்து சென்றனர்.ஸ்ரீராமபுரம் மாத்தினிபட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ் மனைவி திவ்யா 28. கணவர் மோகன்ராஜ் திருச்சியில் பணிபுரிந்து வரும் நிலையில் திவ்யா மாத்தினிபட்டியில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்.பி.ஏ., படித்து வந்தார். நேற்று காலை கல்லுாரிக்கு செல்வதற்காக பூத்தாம்பட்டி - தாடிக்கொம்பு பிரிவு ரோட்டில பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது டூவீலரில் வந்த இரு நபர்களில் ஒருவர், திவ்யாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பினர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை