உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளத்தில் பாய்ந்த கார்

பள்ளத்தில் பாய்ந்த கார்

தாண்டிக்குடி: மதுரை ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்தவர் சேகர் 24, இவர் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் செல்வம், ஹவுஸ்,மணிகண்டன் ஆகியோருடன் கொடைக்கானலை சுற்றிப் பார்க்க நேற்று முன் தினம் காரில் சென்றனர். காரை கார்த்திக் செல்வம் ஓட்டினார். வத்தலக்குண்டு கொடைக்கானல் ரோட்டில் வாழைகிரி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார்த்திக் செல்வம்,மணிகண்டன் 23, சேகர் 24, ஹவுஸ் 21, ஆகியோர் காயமடைந்தனர். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ