உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர்களை தடுமாற வைக்கும் ராட்சத பள்ளம்

டூவீலர்களை தடுமாற வைக்கும் ராட்சத பள்ளம்

பட்டுப்போன மரத்தால் விபத்துதிண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரம் ரோட்டில் பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது .போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில் உள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .ராதா , திண்டுக்கல்...........-------பள்ளத்தால் விபத்துபழநி பழைய தாராபுரம் ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பள்ளத்தால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர் .காயங்கள் ஏற்படுகிறது .நடந்து செல்வோருக்கு பாதிப்பும் ஏற்படுகிறது . வினோத்குமார், பழநி.............------மின்கம்பத்தில் செடிகள்திண்டுக்கல் அருகே குரும்பபட்டியில் மின்கம்பத்தில் செடிகள் படர்ந்துள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. அருகே செல்வோரும் அச்சத்துடன் செல்கின்றனர். செடிகளை அகற்ற மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ,கண்ணன், குரும்பபட்டி ..................-------பலமிழந்த துாண்கள்வெள்ளபொம்மன்பட்டி தும்மலக்குண்டு ரோட்டோரத்தில் போலாச்சிரெட்டிபட்டியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டியின் துாண்கள் பலமிழந்து ஆபத்தாக உள்ளது. அசாம்பவிதங்கள் ஏற்படும் முன் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரகாஷ், வடமதுரை.................-------சேதமடைந்த ரோடால் விபத்துகொடைக்கானல் அண்ணா சாலை செவன் ரோடு இடையே ராட்சத பள்ளம் ஏற்பட்டு டூவீலரில் செல்வோர், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் நகராட்சி ,நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வில்லை. பாரதி, கொடைக்கானல்...............--------ரோட்டில் குவிந்துள்ள குப்பைதிண்டுக்கல் அருகே சிறுமலை ரோட்டில் குப்பை கொட்டி குவித்துள்ளனர். பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் சென்று சென்று வருவதால் குப்பையை அகற்ற வேண்டும். ராமசாமி, திண்டுக்கல்...............---------பொதுமக்கள் செல்வதில் சிரமம்குஜிலியம்பாறை நாகையகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நுழைவுப் பகுதியில் கழிவுநீர் செல்வதால் பொதுமக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர். வழுக்கி கீழே விழுகின்றனர் . சாக்கடை கட்டித்தர வேண்டும். சவடமுத்து, நாகையகோட்டை................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை