உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பயன்பாட்டிற்கு வரும் முன்பே பாராக மாறிய காய்கறி சந்தை கண்டுகொள்ளாத நகராட்சி

பயன்பாட்டிற்கு வரும் முன்பே பாராக மாறிய காய்கறி சந்தை கண்டுகொள்ளாத நகராட்சி

கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சி தினசரி காய்கறி சந்தை பயன்பாட்டிற்கு வரும் முன் பாராக மாறி முகம் சுளிக்கும் நிலையில் உள்ளது.கொடைக்கானல் அண்ணாசாலையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி 56 லட்சம் மதிப்பில் தினசரி சந்தை நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டது.இதை சில மாதங்களுக்கு முன் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். இருந்தப்போதும் கடைகள் பயன்பாட்டிற்கு வரவில்லை. சந்தை கட்டுமான பணிகள் முழுமை பெறாத நிலையில் சந்தைக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் சந்தையை பாராக பயன்படுத்திகின்றனர். இவர்கள் விட்டு செல்லும் மதுபாட்டில், உணவு பொருட்களால் முகம் சுளிக்கும் நிலையில் உள்ளது. பாதுகப்பற்ற நிலையில் உள்ள கடைகளில் குடிமகன்கள் அரை நிர்வாணத்தில் துாங்கும் போக்கும், சந்தை பகுதியை கழிப்பறையாக பயன்படுத்த சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தையின் தற்போதைய நிலை குறித்து நகராட்சி கண்காணிப்பதில்லை. மேலும் கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்தும் இது போன்ற சமூக விரோத செயல்கள் அரங்கேறுவது கவலையளிக்கிறது. இதை தவிர்க்க தினசரி காய்கறி சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை