உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டோர ஜல்லிகற்களால் விபத்து

ரோட்டோர ஜல்லிகற்களால் விபத்து

பண்ணைக்காடு: பண்ணைக்காடு கொடைக்கானல் ரோட்டில் சிதறியுள்ள ஜல்லிகற்களால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.இந்த ரோட்டில் சில மாதங்களாக ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்கான கட்டுமானப் பொருட்கள் ரோட்டோரம் உள்ள வளைவுகளில் குவித்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. கொண்டை ஊசி வளைவில் சிதறியுள்ள ஜல்லிகற்களால் டுவீலர்,கனரக வாகனங்கள் நாள்தோறும் விபத்தில் சிக்குகின்றன. வாகன ஒட்டிகள் நெடுஞ்சாலைத்துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் ,பணிகள் நடக்காத நிலையில் நாள்தோறும் இதை கடந்து செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாத நிலையும், விபத்து அபாயத்திலும் செல்கின்றன. இனியாவது நெடுஞ்சாலைத்துறை மெத்தனப் போக்கை கைவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை