மேலும் செய்திகள்
புது பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுமா
11-Sep-2024
'பாஸ்' இருக்கு; பஸ் இல்ல...
09-Sep-2024
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் பள்ளி மாணவர்கள் பஸ்சில் இடம் பிடிப்பதற்காக நுழைவு வாயில் வரை ஓடி வந்து ஏறுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.வத்தலக்குண்டு பஸ்ஸ்டாண்டில் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் பஸ்களின் வருகை குறைவாக உள்ளதால் மாணவர்கள் ஓடிப் பிடித்து பஸ்களில் ஏறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மாணவர்கள் பஸ் ஸ்டாண்ட்டிற்குள் இருந்து நுழைவுவாயில் வரை ஓடி வந்து பஸ், பஸ் ஸ்டாண்ட் நுழைவதற்கு முன்பே ஏறுவதால் விபத்து அபாயம் உள்ளது.பல ஆண்டுகளாக இப் பிரச்னை நீடித்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே வேளையில் போலீசாரும் மாணவர்களை பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து பஸ் நின்றவுடன் ஏறுவதற்கு அறிவுரை வழங்க வேண்டும்.
11-Sep-2024
09-Sep-2024