உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

திண்டுக்கல்லில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

திண்டுக்கல்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க., திண்டுக்கல் சட்டசபை தொகுதி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பொதுக்கூட்டம் நடந்தது.மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் பாரதி முருகன் தலைமை வகித்தார். மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜமோகன் வரவேற்றார்.ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ,அமைப்பு செயலாளர்கள் சிவசாமி, மருதராஜ் பேசினர்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி, பிரேம்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் வி.டி.ராஜன், மாவட்ட பாசறை செயலாளர் சிவபாரதி, பொதுக்குழு இக்பால், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன், கலைப்பிரிவு செயலாளர் ரவிக்குமார், மாவட்ட முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ