| ADDED : ஏப் 18, 2024 05:39 AM
திண்டுக்கல்:ஓட்டுப்பதிவு மையங்களில் பணியாற்ற உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 8668 பேருக்கான பணி ஒதுக்கீடு கலெக்டர் பூங்கொடி ,தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் காவலிகட்டி முன்னிலையில் நடந்தது.திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள்,அலுவலர்கள், இருப்பு அலுவலர்கள் என 10,500 பேர் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளனர். 7 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களை தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான தேர்வு பணி நேற்று நடந்தது.ஓட்டுச்சாவடிக்கு 1 தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 1,2,3,4 என்ற வகையில் 8,668 அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையானவர்களை விட 20 சதவீதம் கூடுதலாக அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பு அலுவலர்களாக வைக்கப்பட்டுள்ளனர்.ஒரு சட்டசபை தொகுதிக்கு தலா ஒரு பெண்கள் ஓட்டுச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி எண் 114, பழநியில் ஓட்டுச்சாவடி எண் 86, ஓட்டன்சத்திரத்தில் எண் 204, ஆத்துாரில் எண் 283, நிலக்கோட்டையில் எண் 197, நத்தத்தில் எண் 254, வேடசந்துாரில் எண் 170 பெண்கள் ஓட்டுச்சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளன. நுண்பார்வையாளர்கள் 233 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 195 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிவதற்கான ஒதுக்கீடு செய்யப்பட்டது.