| ADDED : ஜூன் 15, 2024 06:34 AM
திண்டுக்கல் : உலக உறுதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி தலைமை மருத்துவமனையில் அரசு ரத்த வங்கிக்கு அதிகம் ரத்ததான வழங்கிய கொடையாளர்களுக்கு சான்றிதழ்,பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ரத்ததானம் செய்த மாநில செயலாளர் ஜமால் முகமது, மாவட்ட பொருளாளர் நத்தம் சேட், சேக் பரித், முகமது யாசின் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி சான்றிதழ்,பதக்கங்களை வழங்கினார். மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு,ரத்த வங்கி அதிகாரி துணை பேராசிரியர் டாக்டர் கீதா ராணி,டாக்டர்கள் புவனேஸ்வரி,செந்தில் குமார்,செந்தில் குமரன்,அரசு ரத்த வங்கி மருத்துவர் லில்லி மலர்,செவிலியர் ராசாத்தி,கவுன்சிலர்கள் சுகுமார்,ஜெயப்பிரியா பங்கேற்றனர்.