| ADDED : ஆக 11, 2024 06:13 AM
திண்டுக்கல் : மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை , பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ,பழநியாண்டவர் சித்த மருத்துவமனை மலைக்கோயில் முதல் உதவி சிகிச்சை மையம் இணைந்து ஆயுஷ் மருத்துவத்தின் சிறப்பம்சங்கள், பாதுகாப்பான சிகிச்சை முறைகள், சித்தர்கள் அருளிய உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை ,நோயில்லா நெறி பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அமுதா, மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை மருத்துவர்கள் ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் பேசினர். இதன் இறுதியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நோயாளிகள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.பழநி கோயில் துணை ஆணையர் வெங்கடேஷ் கலந்து கொண்டார்.ஏற்பாடுகளை சித்த மருத்துவமனை சித்த மருத்துவர்கள் முத்துராமலிங்கம், அனுராதா, சரஸ்வதி, இனிய ரஞ்சனி, கண்காணிப்பாளர் செல்வ சுப்பிரமணியம் செய்திருந்தனர்.