உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானல் பஸ்சில் பிளாஸ்டிக் கொண்டு செல்ல தடை

கொடைக்கானல் பஸ்சில் பிளாஸ்டிக் கொண்டு செல்ல தடை

திண்டுக்கல்: திண்டுக்கல்லிலிருந்து கொடைக்கானலுக்கு அரசு பஸ்சில் சுற்றுலா செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது.கொடைக்கானலில் சுற்றுச்சூழலை கெடுக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிலர் பிளாஸ்டிக் பொருட்களை அங்கும் இங்கும் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. தற்போது கோடை சீதோஷ்ண நிலையை அனுபவிக்க பயணிகள் வருகின்றனர். திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சீசன் முடியும் வரை சிறப்பு பஸ் வசதிகளை செய்துள்ளது. பஸ்களில் பயணிகள் பிளாஸ்டிக் சம்பந்தபட்ட பொருட்களை கொண்டு செல்ல போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது. இது மட்டுமின்றி டிரைவர்,கண்டக்டர்களும் பஸ்சில் ஏறும் பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா என ஆய்வு செய்து பறிமுதல் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை