உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

நத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்: நத்தம் அருகே ஆவிச்சிபட்டி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில், ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல், நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று உள்ளது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம்போல், இரவு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று அதிகாலை வேளையில் பட்டாசுகள் குவித்து வைத்திருந்த இடத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்இந்த விபத்தில், பட்டாசு ஆலையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடலை போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

TSRSethu
ஆக 25, 2024 13:57

பட்டாசு ஆலைகளால் உயிர் சேதம் அதிகமாகிறது. இந்த தொழில் ஒன்றும் அத்தியாவசியமானதும் அல்ல. சுற்றப்புற சூழலுக்கும் கேடு விளைவிக்கிறது. எனவே இதனை தடை செய்யலாம். மது சிகரெட் பீடியையையே தடை செய்ய மனமில்லா அரசு இதையா தடை செய்யும்.


veeramani
ஆக 25, 2024 11:39

ம த்திய அரசின் வேதியியல் ஆயவ்வகத்தின் விஞ்ஞானி கருத்து வெடிக்கு தன்மை கொண்ட பலவகையான வேதியியல் ரசாணையங்களை சேமித்து வைக்கும் முறைகளே தந்தன்மையானது. ரசாயன கிடங்குகள் அரை வட்ட வடிவத்தில் மேல் குயூரை கான்க்ரீட் இல்லாமல் பெண்களால் அடுக்க, ப்பட்டிருக்கவேண்டும். கற்று செல்வத்தார்க்கு பெரிய ஜன்னல் இருக்கவேண்டும் இதில் சேமிக்கும் ஒழுத்து விபத்து நடந்தால் மேல்கூரை சிதறாமல் கட்டிடத்தில் உள்ளேயே விழும் இதனால் உள்ளே இருப்பவர் மட்டும் விபத்தை சந்திக்கநேரிடும். முதலில் ரெவெனுக்கே அதிகாரிகளை படிக்கச்சொல்லுங்கள். கண்டிப்பாக விதிமுறைகளை பின்பற்றசொல்லவும் வெடி விபத்து தவிர்க்கலாம்


ஆரூர் ரங்
ஆக 25, 2024 11:01

நித்தம் நித்தம் நடக்கும் பட்டாசு ஆலை விபத்து இப்போ நத்ததிலும்? . லஞ்சம் பெருக்கெடுத்து ஓடும் மாநிலத்தில் பாதுகாப்பாவது மண்ணாவது?


Kasimani Baskaran
ஆக 25, 2024 09:52

பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இருப்பது போல தெரியவில்லை.


பாமரன்
ஆக 25, 2024 09:40

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த பட்டாசு ஆலை மட்டுமே இன்னமும் மேனுவல் லேபர் மூலம் நடக்கிறது.... இது போன்ற மற்றொரு அபாயமான வேலையான கழிவு நீர் தூய்மை படுத்ததலில் கோர்ட் தலையிட்டதால் அட்லீஸ்ட் நாம் கே வஸ்தா இயந்திரங்கள் வந்து விபத்துகள் பெருமளவு குறைந்த மாதிரி இதிலும் செய்யனும்...


கஜேந்திரன்
ஆக 25, 2024 09:20

ரெண்டு லட்சம். கேரண்டி. சமூகநீதி காக்கப்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை