உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓட்டல் உரிமையாளரை மிரட்டியவர் மீது வழக்கு

ஓட்டல் உரிமையாளரை மிரட்டியவர் மீது வழக்கு

தாடிக்கொம்பு: திண்டுக்கல் நேருஜி நகரை சேர்ந்தவர் வேணுகோபால் 54. இவர் மதுரை திருச்சி ரோடு செட்டிநாயக்கன்பட்டி பிரிவு அருகே ஓட்டல் நடத்துகிறார். இவரது ஓட்டலுக்கு சென்ற வேடசந்துார் கொசவபட்டியை சேர்ந்த நவீன் சென்றார். பழைய இறைச்சியை வைத்துள்ளதாக கூறி அங்குள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டினார். சம்பவத்தை வீடியோவாக எடுத்தார். இதை மீடியாக்களிடம் கொடுக்காமலிருக்க தனக்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும் எனக்கேட்டு வேணுகோபாலை போனில் மிரட்டினார். வேணுகோபால் தாடிக்கொம்பு போலீசில் புகாரளித்தார். நவீன் மீது எஸ்.ஐ., பூபதி வழக்குப் பதிந்துள்ளார்.வேணுகோபாலிடம் நவீன் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி