உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூம்பாறையிலிருந்து பஸ் வசதி கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பூம்பாறையிலிருந்து பஸ் வசதி கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறையிலிருந்து அரசு பள்ளிக்கு பஸ் வசதி கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. பூம்பாறை கோமதி தாக்கல் செய்த பொதுநல மனு:பூம்பாறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளேன். பூம்பாறையிலிருந்து 5 கி.மீ., துாரத்தில் புலகவையில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் சரக்கு வாகனங்களில் சென்றுவருகின்றனர். விபத்து அபாயம் உள்ளது. சிலர் வனப்பகுதி பாதை வழியாக நடந்து சென்று வருகின்றனர். வன விலங்குகளின் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர்.தினமும் காலை, மாலையில் பள்ளிக்கு போக்குவரத்துக் கழக பஸ்களை இயக்கக்கோரி தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: தினமும் 4 முறை பஸ்கள் இயக்கப்படுகிறது.மனுதாரர் தரப்பு: இயக்கப்படவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள் பள்ளிக் கல்வித்துறை செயலர், போக்குவரத்துத்துறை செயலர், திண்டுக்கல் கலெக்டர் ஜூன் 18ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை