உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளி கட்டடத்தின் உறுதிகுறித்து அறிக்கை அளியுங்க கலெக்டர் பூங்கொடி உத்தரவு

பள்ளி கட்டடத்தின் உறுதிகுறித்து அறிக்கை அளியுங்க கலெக்டர் பூங்கொடி உத்தரவு

திண்டுக்கல்: ''பள்ளி கட்டடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க'' திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி கேட்டுகொண்டார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கல்வித்துறை சார்ந்த பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள்,அடிப்படை வசதிகள் குறித்து குழு உறுப்பினர்கள் துறை சார்ந்து ஆய்வு செய்து அதனை உடனடியாக நிறைவேற்றி அறிக்கை சமர்பிக்க வேண்டும். வகுப்றைகள், கட்டடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். நம்ம பள்ளி நம்ம ஊரு திட்டத்தின்கீழ் 36 பள்ளிகளில் ரூ.2.10 கோடி மதிப்பில் நடக்கும் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகாமால் தடுத்து, நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பிற்காக விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும் என்றார். முதன்மை கல்வி அலுவலர் புண்ணிக்கொடி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேஸ்வரி, சந்திரகுமார், அமுதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை