மேலும் செய்திகள்
பெருந்துறையில் சமுதாய வளைகாப்பு விழா
06-Mar-2025
சாணார்பட்டி: -கோபால்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன் தலைமை வகித்தார். குழந்தைகள் திட்ட அலுவலர் பூங்கொடி முன்னிலை வகித்தார், ஊட்டச்சத்து அலுவலர் சோபியாரூபி வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்சா, தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர் தர்மராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள், துணைத் தலைவர் ராமதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, இளையராஜா, மருத்துவ அலுவலர் அசோக் கலந்து கொண்டனர். கர்ப்பிணிகளுக்கு சேலை, வளையல், பழங்கள், பூ உள்ளிட்ட சீர்வரிசை பொருள்கள் , 9 வகை கலவை சாதம் வழங்கப்பட்டது.
06-Mar-2025