பாழாகும் பறிமுதல் வாகனங்கள்; குமுறும் உரிமையாளர்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பிடிபட்ட டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவைகள் திறந்த வெளியில் ஆண்டுக்கணக்கில் உள்ளதால் வெயில், மழை காலங்களில் வீணாகி வருகின்றன. உதிரி பாகங்களும் எதற்கும் பயன்படாது வீணாகும் நிலை உள்ளது. இது போன்ற வழக்குகளை துரிதப்படுத்தி வாகனங்களை பாதிக்கப்பட்ட நபர்களிடம் வழங்க போலீஸ் துறை முன் வர வேண்டும்.