உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பங்களிப்பாளர்கள் கலந்தாய்வு

பங்களிப்பாளர்கள் கலந்தாய்வு

வடமதுரை : சீட்ஸ் அறக்கட்டளை சார்பில் அய்யலுார் வாழ்வாதார திட்டத்தின் மூலம் வனப்பகுதியில் தேவாங்குகள் வாழிடப் பகுதியையொட்டிய கிராம பகுதியில் 20 ஆண்டுகளில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் இலவசமாக பல்வேறு வகை மரங்கன்று நட்டு வளர்க்கப்படுகிறது. இதற்காக விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட மரங்கள் வளர்ப்பதற்கான பங்களிப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் வடமதுரையில் நடந்தது. சீட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் முத்துசாமி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் கருப்பன், ஊராட்சி தலைவர்கள் விநாயகன், முனியப்பன், ராஜரத்தினம் முன்னிலை வகித்தனர். மேலாளர் அருண்பாண்டி வரவேற்றார். ஆசிய கண்ட வாழ்வாதார நிதியத்தின் முதன்மை திட்ட மேலாளர் ஆம்லாநடராஜன், திட்ட இயக்குனர் ரவிக்குமார், காந்திகிராம பல்கலை வேளாண்காடு வளர்ப்பு வல்லுனர் சரவணன், களம் அறக்கட்டளை நிர்வாகி சந்தோஷ் பேசினர். கள ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ