உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அச்சுறுத்தும் மின் கம்பங்களால் காத்திருக்கு ஆபத்து...

அச்சுறுத்தும் மின் கம்பங்களால் காத்திருக்கு ஆபத்து...

பெயர் பலகையால் தடுமாற்றம் : திண்டுக்கல் ஒடுக்கம் ரோடு அருகே உள்ள பெயர் பலகையில் உள்ள எழுத்துக்கள் அழிந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சிலர் தெரு பெயர் தெரியாமல் சுற்றி செல்கின்றனர். பெயர் பலகையை புதுபிக்க வேண்டும்.--ஜெகதீஷ், திண்டுக்கல்.---------குப்பையால் உருவாகும் சீர்கேடு : திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் குப்பையை கொட்டி அகற்றாமல் தீவைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ்குமார், திண்டுக்கல்.--------கழிவுநீரால் சுகாதாரக்கேடு : நத்தம் பரளிபுதுாரில் அரசு நடுநிலைப்பள்ளி எதிரே உள்ள பாலத்தில் தண்ணீர் தேங்குகிறது. பள்ளி சிறுவர்கள் நடமாடும் பகுதியில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவு நீரை அகற்ற வேண்டும்.-முருகேசன், பரளிபுதுார்.-------கிடப்பிலிருக்கும் பணிகள் : எரியோடு கோவிலுாரிலிருந்து தங்கச்சியம்மாபட்டி செல்லும் ரோட்டில் இருக்கும் ரயில்வே 'சப் வே' பணி 6 மாதங்களுக்கு மேலாக கிடப்பில் உள்ளது. இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். விரைவில் பணி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.--கார்த்திகேயன், எரியோடு.-------தொற்று பரப்பும் குப்பை : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் குப்பை மலைபோல் குவிந்துள்ளது. பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பையால் பாதிப்பு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கண்ணன், நாகல்நகர்.---------தொற்று பரப்பும் கழிவுநீர் : தாண்டிக்குடி போஸ்ட் ஆபிஸ் செல்லும் ரோட்டில் சாக்கடை கழிவுநீர் மாத கணக்கில் செல்கிறது. இவ்வழியே பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடந்து செல்வதால் நோய் தொற்று அபாயம் உள்ளது. ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலன், தாண்டிக்குடி.-------அச்சுறுத்தும் மின்கம்பம் : திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் பின்பகுதியில் உள்ள பாலாஜி நகரில் மின்கம்பம் சேதமடைந்து எலும்பு கூடாக உள்ளது. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சிமென்ட் பூச்சிகள் கீழே விழுந்து கம்பிகள் தெரிகிறது. மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.-ராஜன், திண்டுக்கல்.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ